மோதலில் ஈடுபட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை

Report Print Malar in சமூகம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 மாணவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று அவர்களை முன்னிலைப்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 08ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த மோதல் தொடர்பில் கருவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.