கரைச்சிப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபைக்குட்பட்ட சகல விலங்குப்பண்ணையாளர்களும் பிரதேச சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரைச்சிப் பிரதேச சபையின் 23ஆவது சபை அமர்வு நேற்று தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சபைக்குட்பட்ட பகுதிகளில் விலங்கு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் விலங்கு பண்ணையாளர்கள் விலங்குகளை உரிய முறையில் பராமரிக்காததினால் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

குறிப்பாக, பாதுகாப்பற்ற முறையிலான பன்றி வளர்ப்புக்களால் சுற்றுச்சூழல் மாசடைதல் மற்றும் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்காது வீதிகளில் விடுவதினால் இரவு வேளையில் கால்நடைகளால் வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு விலங்குப் பண்ணையாளர்கள் தமது வளர்ப்பு விலங்குகளை உரிய முறையில் பராமரிக்காததினால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இவ்விடயங்கள் தொடர்பில் கரைச்சிப் பிரதேசசபைக்குட்பட்ட சகல விலங்குப்பண்ணையாளர்களும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் கரைச்சிப் பிரதேச சபையில் தமது பதிவுகளை மேற்கொண்டு அனுமதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.