டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழக்கும் பொலிஸ் அதிகாரிகள்!

Report Print Ashik in சமூகம்

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தரான பி.சீ.பியரத்தின கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி விடுமுறையில் வீட்டிற்கு சென்ற எஸ்.ரத்னாயக்க டெங்கு காய்ச்சல் காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் அனுராதபுரம் தளாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பொலிஸ் அதிகாரி எனத் தெரியவருகின்றது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனரா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.