வவுனியாவில் பாடசாலைக்கு முன்பாக பட்டாசு விற்பனை: நகரசபை நடவடிக்கை

Report Print Theesan in சமூகம்
73Shares

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்திற்கு முன்பாக பாதுகாப்பற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பட்டாசு விற்பனை நிலையம் வவுனியா நகர சபையினரின் தலையீட்டை அடுத்து அகற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று மதியம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நபர் ஒருவர் பட்டாசுகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

பாடசாலை முடிவடைந்ததும் அவ்விடத்திற்கு வந்த மாணவர்கள் பட்டாசுகளை வாங்குவதற்காக குழுமியிருந்துள்ளனர்.

இதனை அவதானித்த வவுனியா சிரேஸ்ட சட்டதரணி இ.தயாபரன் பட்டாசு விற்பனை செய்யும் நபரிடம் சென்று, இப்பகுதியில் பட்டாசுகளை விற்பனை செய்தல் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் நகரசபை தலைவரின் நடவடிக்கையை அடுத்து குறித்த விற்பனை நிலையம் அகற்றப்பட்டுள்ளது.