மிகச் சிறப்பாக இடம்பெற்ற நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம்

Report Print Vanniyan in சமூகம்
223Shares

முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில், தைப்பொங்கல் உற்சவம் மிகச் சிறப்பாக இன்றையதினம் இடம்பெற்றது.

இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் அபிஷேகம் இடம்பெற்றதுடன் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் செம்மலை கிராம மக்கள், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் லோகேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் அதிக சர்ச்சைகளுக்கு உள்ளான குறித்த ஆலயத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் நிகழ்வின்போது அதிகளவிலான பொலிஸார் ஆலய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததோடு, பொலிஸார் மற்றும் அரச புலனாய்வாளர்கள் ஆலயத்திற்கு வருகைத் தந்த மக்களை புகைப்படம் எடுத்துச் சென்றனர் என அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.