அப்பாவி விலங்குகள் குறித்து திகிலூட்டும் காணொளி வெளியிட்டுள்ள நாமல்

Report Print Malar in சமூகம்

அப்பாவி வாய் இல்லா விலங்குகள் மீது கொடுமை மற்றும் உணர்வற்ற தன்மை காட்டப்படுவது திகிலூட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில், நாய் ஒன்றை சுட்டுக்கொல்லும் காணொளியை பதிவிட்டுள்ள அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

மேலும் அதில், இந்த குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வர தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் சமீபத்தில் விலங்குகளுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்த சம்பவங்களைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். மிக அண்மையில் நிகாவேரதியாவில் நாய்கள் கொல்லப்பட்டது.

இந்த அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.