ராஜீவ் காந்தி கொலை வழக்கு! பேரறிவாளனின் மனு தொடர்பில் புதிய அறிக்கை கோரும் நீதிமன்றம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் புதிய அறிக்கை ஒன்றை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்த நிலையிலேயே புதிய அறிக்கை கோரி நீதிமன்றம் சி.பி.ஐக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளர், தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை நிறுத்தி வைக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரியை வாங்கி கொடுத்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஆனால், அந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் பேரறிவாளன் தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், அதிருப்தி தெரிவித்தனர்.

ராஜீவை காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட பெல்ட் குண்டு குறித்து சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கையில் எந்த புதிய விடயமும் இடம்பெறவில்லை என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளனர்.