யாழ். மாநகரம் மத்தியில் திடீரென முளைத்த பௌத்த கொடி

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் பௌத்த கொடி ஒன்று அடையாளம் தெரியாதவரால் கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டமை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அவ்விடத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் விரைந்து சென்று விசாரித்த போது அப்பகுதியில் வழமையாக உலாவும் மனநலம் குன்றிய ஒருவர் இன்று அதிகாலை வேளையில் குறித்த பகுதியில் உள்ள கற்களை சேர்த்து குவித்து கொடியினை அதிலே கட்டுவதை தாங்கள் கண்டதாக தெரிவித்ததை அடுத்து குறித்த சர்ச்சைக்கு தீர்வு கிட்டியது.

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு அதன் மீது பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அருகில் இருந்த கடை உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், “இங்கு நிறுவப்பட்டுள்ள கொடி மற்றும் கற்கள், கம்பிகள் எவையும் இங்கு காணப்படவில்லை.

எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டுள்ளன. இது நேற்று நள்ளிரவு நிறுவப்பட்டுள்ளது. நாங்கள் காலையில் வரும்போதே இது காணப்பட்டது என தெரிவித்தனர்.