வவுனியா தெற்கு வலய ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

ஒரே பாடசாலையில் 7 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய வவுனியா தெற்கு வலய ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரால் குறித்த இடமாற்ற கடிதங்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பாடசாலைகள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 7 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களுக்கு குறித்த வலயத்திற்குள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், பல பாடசாலைகளின் ஆசிரியர் வளப் பங்கீடு சரியான முறையில் பகிரப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவு நிவர்த்தி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.