கிழக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு சென்ற அநீதி இழைக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் அநீதி இழைக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் இன்று ஆளுநர் செயலகத்திற்கு சென்றுள்ளனர்.

கிழக்கு ஆளுநரின் ஆலோசகர் கொட்டகதெனியவை சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்.

இதன்போது ஆளுநரின் ஆலோசகர், தனக்கு ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுவதாகவும் இதனை கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது அநீதி இழைக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பல வருடகாலமாக தாம் எவ்வித ஊதியமும் இன்றி கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் சேவையாற்றியதாகவும் யுத்தம் மற்றும் சுனாமி போன்ற பேரிடர் காலங்களிலும் எவ்வித எதிர்பார்ப்புக்களும் இன்றி மாணவர்களுக்கு கல்வியை வழங்கியதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் கடந்த கால அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மாத்திரம் தொழிலினை வழங்கி தம்மை புறக்கணித்துள்ளதாகவும் விசனம் தெரிவித்தனர்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் 200 பேர் உள்ளதாக அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.