நிரந்தர நியமனம் வழங்குவதில் புறக்கணிப்பு! சுகாதாரத் தொண்டர்கள் குற்றச்சாட்டு

Report Print Sumi in சமூகம்

நீண்ட காலமாக வடக்கு மாகாணத்தில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றி தற்போது வழங்கப்படவுள்ள நியமனத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து தமக்கு நீதி வேண்டும் என பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களை நிரந்தரமாக்கும் வேலைத் திட்டம் இடம்பெறவுள்ள நிலையில் கடந்த பத்து வருடத்திற்கு மேலாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காது 6 மாத ஒரு வருட காலம் தொண்டர்களாக கடமையாற்றிய, அவர்களுக்கு அரசியல் செல்வாக்கின் ஊடாக நியமனங்கள் வழங்க உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்கள்.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.