அதிகரித்து வரும் வளிமாசு! பெப்ரவரி மாத நடுப்பகுதியில் நீங்கிவிடும்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் தொடர்ந்தும் உடல் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வளிமாசு எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து நீங்கிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வளித்திறன் தொடர்பான சிரேஸ்ட ஆய்வாளர் எச்.டி.எஸ்.பிரேமஸ்ரீ இதனை தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலையின் பின்னரே கடந்த நவம்பர் முதல் இந்த வளிமாசு ஏற்பட்டது. இது சுகாதார கேட்டை ஏற்படுத்தக் கூடியது

இந்த நிலையில் இந்த வளிமாசு நிலை பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நீங்கிவிடும் என்று பிரேமஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் மாத்திரம் வளிமாசு நிலை 130 சுட்டெண்ணில் இருந்தது. இதனை தவிர கண்டி மற்றும் குருநாகல் பகுதிகளிலும் வளிமாசு ஏற்பட்டுள்ளது.

இந்த வளிமாசு கடந்த நவம்பர் 5ஆம் திகதி இலங்கையின் அமரிக்க தூதரகத்தினால் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தவேளையில் வளிதிறன் சுட்டெண் 167ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Latest Offers

loading...