சமூகத்தின் ஆரோக்கியத்திற்கான சேவை தொடர்பில் வவுனியாவில் செயலமர்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

உள சமூக சேவை வழங்கலில் அதிபர்களின் திறனை அதிகரிக்கும் நோக்கில் வவுனியாவில் அதிபர்களுக்கான செயலமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

வவுனியா, மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அணுசரணையில் குடும்ப புனர்வாழ்வு நிலையம் மற்றும் வடமாகாண உளவியல் சமூக வள நிலையம் என்பவற்றின் ஏற்பாட்டில் இச் செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

'சமூகத்தின் ஆரோக்கியத்திற்கான சேவை' எனும் தொனிப் பொருளில் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு உளவியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த கல்வியை வழங்குவதன் முக்கியத்துவம், முழுமையான மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், மன வடு என்றால் என்ன, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் மன வடுவின் தாக்கம் என்பன தொடர்பில் இதன்போது கருத்துரைகள் வழங்கப்பட்டன.

இதில் வவுனியா வடக்கு வலயம், வவுனியா தெற்கு வலயம் மற்றும் மடு வலயத்தை சேர்ந்த 36 அதிபர்கள், வடக்கு மாகாண உளவியல் சமூக வள நிலையத்தின் உதவி முகாமையாளர் எஸ்.உதயகலா வளவாளராக கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...