லத்வீயா பிரஜைக்கு ஆயுள் தண்டனை

Report Print Steephen Steephen in சமூகம்

கொக்கேய்ன் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 29 வயதான டேனி லோ என்ற லத்வீயா நாட்டு பிரஜைக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜ் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி 1.5 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளை தனது பயணப் பொதியில் மறைத்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கடத்தி வந்த போது சந்தேகநபரை விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்ததுடன் அரச சட்டத்தரணி மலிக் அசீஸ் வழக்கை நெறிப்படுத்தியுள்ளார்.

போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் அனில் பண்டார விசாரணைகளுக்கு உதவியுள்ளார்.