வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை ஹொரவப்பொத்தானை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

வியட்நாமில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி இவர் பணமோசடி செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண் ஹொரவப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இவருக்கு எதிராக ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையத்தில் எட்டு முறைப்பாடுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் பல பேரிடம் வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பன்னிரண்டு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணத்தினை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபரை ஹொரவப்பொத்தானை பொலிஸார் தடுத்து வைத்துள்ளதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Latest Offers