நோயை பரப்பக்கூடியதாக சந்தேகிக்கப்படும் புதிய நுளம்பு வகை இலங்கையில் கண்டுபிடிப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையின் அம்பேபுஸ்ஸ பிரதேசத்தின் வெவல்தெனிய எனும் இடத்தில் புதிய நுளம்பு வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நுளம்பு நோயை பரப்பக்கூடியது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புள் (Near inful) என இந்த நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019 ஒக்டோபர் மாதம் அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் இந்த நுளம்பை கண்டறிவதற்கு விசேட ஆய்வு ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.