கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை இரவோடு இரவாக வழிமறித்த இராணுவத்தினர்

Report Print Theesan in சமூகம்

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்திலிருந்து நேற்றிரவு டைனமைட் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேரியகுளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் வழிமறிக்கப்பட்ட பேருந்து இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் பேருந்தில் உரிமை கோரப்படாமலிருந்த பொதியொன்றிலிருந்தே 51 டைனமைட் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இராணுவத்தினரால் செட்டிக்குளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக படங்கள் - திலீபன்