மன்னாரில் உள்ள உப்பு உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர்

Report Print Ashik in சமூகம்

மன்னாருக்கு அமைச்சர் விமல் வீரவன்ச இன்று காலை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மன்னார், மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு சென்ற அமைச்சர், அங்குள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது அங்கு கடமையாற்றுகின்ற ஊழியர்கள் தமது பிரச்சினைகளை அமைச்சரிடம் நேரடியாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.