சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களுக்கான விசேட பூஜை வழிபாடு

Report Print Thileepan Thileepan in சமூகம்

சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வடமாகாண வீரர்களுக்கு ஆசி வேண்டி வவுனியாவில் விசேட பூஜை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டிக்கு வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து பங்குபற்றவுள்ள வவுனியாவை சேர்ந்த ஏழு குத்துச்சண்டை வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை நிகழ்வுகள் இன்று நடைபெற்றுள்ளன.

வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் குறித்த விசேட பூஜை நிகழ்வுகள் ஆலய பிரதம குருக்கள் சிவசிறி பிரபாகர குருக்கள் தலைமையில் நடைபெற்றுள்ளன.

இலங்கை தேசிய குத்துச்சண்டை அணியில் இடம் பிடித்துள்ள வவுனியாவை சேர்ந்த 7 குத்துச்சண்டை வீரர்களுக்கும் ஆசி வேண்டி நடத்தப்பட்ட இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவரும் கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார், வீரர்கள் மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...