மின் கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்! திருகோணமலையில் சம்பவம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கோமரங்கடவல, கறக்கஹவெவ பகுதியில் மின்கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய அஜித் குணசேகர எனத் தெரியவருகின்றது.

கறக்கஹவெவ, லுனுகல விகாரைக்கு பின்புறமாக உள்ள காணிப் பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேளை யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி இவர் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers