கல்முனை பேருந்து நிலையத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

குன்றும்குழியுமாக காணப்படும் கல்முனை பேருந்து நிலையத்தை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்முனை மாநகரசபைக்குச் சொந்தமான கல்முனை பேருந்து நிலையம் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் பலவருடங்களாக புனரமைப்புச் செய்யப்படாமலும் உள்ளது.

கல்முனை பேருந்து நிலையத்தின் ஊடாக பல பேருந்துகள் தினமும் பல்வேறு இடங்களுக்கு பயணித்து வருகின்றன.

ஆனாலும், குறித்த பகுதி தொடர்ச்சியாக குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் மழைக் காலங்களில் நீர் தேங்கி நுளம்புகள் பெருக்கக் கூடிய அபாய நிலையிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பல முறை பல அரசியல்வாதிகள், நிர்வாகிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் வந்து பார்வையிட்டும் இன்னமும் புனரமைப்பு செய்யப்படாது இருப்பதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எனவே பலரும் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் இப் பேருந்து நிலையத்தை மிக விரைவாக புனரமைத்துத் தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.