பெறுமதி வாய்ந்த வலம்புரி சங்குகளுடன் ஒருவர் கைது

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பில் பல இலட்சம் ரூபாய் பெறுதியான பெருமளவு வலம்புரி சங்குகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் வைத்து நீர்கொழும்பினை சேர்ந்த ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேகநபரின் பயணப்பையில் இருந்து 19 வலம்புரி சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வலம்புரி சங்குகள் வியாபார நோக்கில் நீர்கொழும்பில் இருந்து, மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ், மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவற்றினை கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், நாளை கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.