மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைப்பு: பெண்கள் உட்பட 57 பேர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த 25 பாலியல் தொழில் விடுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் பெண்கள் உட்பட 57 கைது செய்துள்ளனர்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதியின் கீழ் கடந்த 16ஆம் திகதி இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

பாலியல் தொழில் விடுதிகள் இயங்கி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து 35 மசாஜ் நிலையங்கள் சோதனையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பாலியல் தொழில் விடுதிகள் என அடையாளம் காணப்பட்ட 25 இடங்களை சுற்றிவளைப்பை மேற்கொண்டு அவற்றை நடத்தி வந்த முகாமையாளர்கள், பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரள்ளை, வெள்ளவத்தை, கிருளப்பனை, பம்பலப்பிட்டி, நாராஹென்பிட்டி, கிராண்ட்பாஸ், மருதானை, தலங்கம ஆகிய இடங்களில் இந்த விடுதிகள் இயங்கி வந்துள்ளன.