சிறுமி துஷ்பிரயோகம்: வழக்கை விசாரித்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்

Report Print Steephen Steephen in சமூகம்

சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் அக்குரெஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்திய பெண் பொலிஸ் அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவொன்றின் மூலம் பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சம்பவத்தின் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட செய்தி அனைவரும் அறிந்த விடயம்.

இந்த குற்றவாளி பிணையில் விடுதலையானார் என்ற செய்தி நாளைய தினம் கேட்க கிடைக்குமோ என்ற சந்தேகத்தை மனதில் வைத்து இதனை எழுதுகிறேன்.

இந்த நாட்டின் பணம், அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு குற்றம் செய்பவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுப்பது என்பது இலகுவான காரியமல்ல.

மாத்தறை பிராந்திய சிறார் மற்றும் பெண்கள் பணியகத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி வருணி போகாவத்தவே அக்குரெஸ்ஸ சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வருவது அவருக்கு இலகுவான காரியமாக இருந்திருக்காது என்பது எனக்குத் தெரியும்.

இதன் பிரதிபலனாக தற்போது இடமாற்றம், மரண அச்சுறுத்தல் உட்பட பல சவால்களை வருணி போகவத்த எதிர்நோக்கி வருகிறார்.

ஜனாதிபதிக்கு இவை தெரியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் பெண் என்ற வகையில் வருத்தப்படுகிறேன். பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு மத்தியில், அவர்களுக்காக குரல் கொடுக்கும் வருணி போன்ற அதிகாரிகள் தற்போது கவலைக்குரிய நிலைமை.

எனினும், இப்படியான குற்றங்களை தடுப்பதற்காக இருக்கும் அதிகாரிகளை மேலும் மேலும் அதைரியப்படுத்தாமல், தமது கடமையை அழுத்தங்கள் இன்றி செய்ய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டியது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாகும் என அந்த பெண் இட்டுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சிறுமியை தனது ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியான அக்குரெஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவா லியனகே சுனில் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபெந்திகே நேற்று 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.