15 பொலிஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்

Report Print Steephen Steephen in சமூகம்

இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 15 பொலிஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த இடமாற்றத்தின் அடிப்படையில், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நுவன் வெதசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குற்றவியல் விசாரணை திணைக்களமும் நுவன் வீரசிங்கவின் பொறுப்பின் கீழேயே இயங்கி வருகிறது.

இதனை தவிர 7 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், 4 பொலிஸ் அத்தியட்சகர்கள், 3 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் சேவை அவசியம் கருதி இடமாற்றம் செய்ய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.