சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 10 பேர் கைது

Report Print Mubarak in சமூகம்

பொலன்னறுவை - மணம்பிடியவில் தொல்பொருட்கள் காணப்படும் பகுதியில் வைத்து 10 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் உலாவிக்கொண்டிருந்த குற்றச்சாட்டின்பேரில் பொலிஸார் இன்று காலை இவர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு முச்சக்கரவண்டிகளும், இரண்டு மோட்டர்சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

புதையல் அகழ்வு பணிகளுக்காக மேற்படி தொல்பொருட்கள் நிறைந்த பகுதிகளுக்கு சந்தேகநபர்கள் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 40 வயது தொடக்கம் 70 வயதிற்கு இடைப்பட்ட குருணாகல், நாரம்மல, வெலிகந்த, தெய்யத்தகண்டிய மற்றும் சுலஸ்திபுரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலன்னறுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.