அமைச்சர் டக்ளஸ் கிளிநொச்சிக்கு விஜயம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி இரணைமடு மற்றும் கிலாலி பகுதிகளிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இரணைமடுக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் பிரச்சினைகளை அவர் கேட்டறிந்ததுடன், நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் முகமாக மீனவர்களுடன் சேர்ந்து இரணைமடுக் குளத்தில் ஒரு இலட்சம் மீன் குஞ்சுகளை விட்டார்

அத்துடன் வடக்கு மாகாணத்தில் 40 குளங்களை தெரிவு செய்து நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.

இதேவேளை கிலாலி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், கிலாலி பகுதியில் புதிதாக மூன்று மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட கிராமிய மீன்பிடி கட்டிடத்தொகுதியை திறந்து வைத்து மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

அத்துடன் கிலாலி பகுதியில் மண் அகழப்படுவதற்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.

Latest Offers