வடகிழக்கு கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்து: மீனவர் படுகாயம்

Report Print Mohan Mohan in சமூகம்

வடகிழக்கு கடல் பகுதியில் வைத்து இன்று அதிகாலை படகு ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் சிக்கிய மீனவர் படுகாயமடைந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது படுகாயமடைந்த மீனவர் தென்பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகிறது.

Latest Offers