ட்ரோன் பாவனையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்

Report Print Ajith Ajith in சமூகம்

ட்ரோன் கருவிகளின் பறப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நேற்று அரசாங்கம் நீக்கியபோதும் புதிய ஒழுங்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இலங்கையின் வான்பரப்பில் ட்ரோன் பாவனை தடை செய்யப்பட்டிருந்தது.

புதிய ஒழுங்குகளின்படி ட்ரோன் கருவிகளின் பறப்பு கட்டுப்படுத்தப்படுத்தப்படும்.

ட்ரோன் பாவனையாளர்கள் முன்கூட்டியே பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதிப் பெறவேண்டும்.

முன்னர் ட்ரோன் பாவனையாளர்கள் நுகர்வோர் அதிகாரசபையில் அனுமதிப் பெறவேண்டும்.

எனினும் புதிய நடைமுறையின்படி நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் பதிவு செய்வதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும்.