அபுதாபி விபத்தில் இரு இலங்கைப் பெண்கள் கொல்லப்பட்டமை உறுதியானது

Report Print Ajith Ajith in சமூகம்

அபுதாபியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இரண்டு இலங்கை பெண்கள் கொல்லப்பட்டமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது.

இதில் இலங்கையர்கள் உட்பட்ட 6 பேர் கொல்லப்பட்டதுடன் 19 பேர் காயமடைந்தனர்.

சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபடும் பெண்களை ஏற்றிச்சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியது.

அதிக வேகத்துடன் பயணித்த இந்த பேருந்து பாரவூர்தியுடன் மோதியே விபத்துக்குள்ளாகியது.