சுவிஸில் வாழும் கணவன்! இலங்கையிலுள்ள மனைவி கொடூரமாக கொலை! பின்னணியில் மர்மம்

Report Print Vethu Vethu in சமூகம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உனவட்டுன பிரதேசத்தில் பெண் வர்த்தகர் ஒருவர் கொடூரமான கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நிலூகா சாமலித என்ற ஹோட்டல் ஒன்றை நடத்திச் செல்லும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நிலூகா ஒரு பிள்ளையின் தாயாகும். அவரது கணவர் குடும்ப பிரச்சினை காரணமாக அவரை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றார்.

சம்பவ தினமன்று இரவு தனது மகனுடன் நிலூகா வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதன் போது திடீரென அவரது சுற்றுலா ஹோட்டலுக்குள் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் நிலூகாவை வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதற்கு முன்னரும் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இந்த பெண்ணின் கணவருக்கும் நிலூக்காவிற்கு இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சினை ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

நிலூகா ஹோட்டல் நடத்தும் காணியை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் முயற்சியில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் குறித்த பெண் கணவனால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்தார்களா என பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...