வவுனியா - மன்னார் பிரதான வீதியோரங்களில் தரித்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - மன்னார் பிரதான வீதியில் தரித்து நிற்கும் கனரக வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியிலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா - மன்னார் பிரதான வீதியில் இன்று அதிகாலை தொடக்கம் வீதியோரத்தில் பத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தரித்து நிற்கின்றன.

குறித்த கனரக வாகனங்களில் காற்றாலை அமைப்பதற்காக பீப்பாய்கள் காணப்படுவதாகவும், அந்த பீப்பாய் வடிவ உருளைகள் யாழில் அமைக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பீப்பாய்களை ஏ9 வீதியுடாக கொண்டு செல்வதில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதினால் வவுனியா - மன்னார் பிரதான வீதியுடாக மன்னாரை சென்றடைந்து மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக (பூநகரி வீதி) யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

பகல் நேரங்களில் வீதியில் பயணிப்பதினால் பாரிய போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினால் இன்று அதிகாலை தொடக்கம் வவுனியா - மன்னார் பிரதான வீதியின் பட்டானீச்சூர், வேப்பங்குளம், குருமன்காடு போன்ற பகுதிகளின் வீதியோரங்களில் குறித்த கனரக வாகனங்கள் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் வவுனியா - மன்னார் பிரதான வீதி குன்றும் குழியுமான பாதை என்பதினாலும், வீதியில் 3இல் 1 பகுதியில் இந்த வாகனங்கள் தரித்து நிற்பதினால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...