இலங்கை தமிழரசுக் கட்சியின் பொங்கல் விழா

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொங்கல் விழா திருகோணமலை நகராட்சி மன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

தமிழரசுக் கட்சி திருகோணமலை பிரிவு செயலாளர் குகதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொங்கல் வைக்கப்பட்டுள்ளதுடன், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம், திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் ஆண்டகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.