மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் காயம்

Report Print Theesan in சமூகம்
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குருமன்காடு பகுதியிலிருந்து புகையிரத வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சிறு வீதியால் திரும்ப முற்பட்ட வேளை அதே வீதியில் பின்புறமாக பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...