355 மில்லியன் ரூபாவிற்கு 7 மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ள அரசியல் முக்கியஸ்தர்

Report Print Ajith Ajith in சமூகம்

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பதவியில் இருந்த முக்கிய அமைச்சர் ஒருவர் நாட்டில் உள்ள சுப்பர் மார்கட் வலையமைப்பிற்கு 7 மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது மதுவரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவரின் துணையுடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது ஒரு மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் 55 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் 355 மில்லியன் ரூபாவை பெற்று குறித்த இருவரும் பகிர்ந்துள்ளனர்.

இதேவேளை இந்த விற்பனையின் போது மதுவரித் திணைக்களத்துக்கு அனுமதிக் கட்டணமாக 3 இலட்சம் ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.