மட்டக்களப்பில் டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் டெங்கை கட்டுப்படுத்தும் நோக்கில் புகை விசிறும் வேலைத்திட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் 750 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மண்முனை வடக்கு பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் 225 நபரும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மற்றும் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் ஒருவர் உயிரழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம்கொடுக்காத வகையில் சுத்தமாக வைத்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest Offers

loading...