நான்கு இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்கு இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்று குறித்தநபரை ஆஜர்படுத்தியபோதே இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை, மாணிக்கவாசகர் வீதிப் பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவருகின்றது.

நண்பர் ஒருவரிடம் ஒப்பந்த வேலைகள் மேற்கொள்வதற்காக வேண்டி சந்தேகநபர் நான்கு இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.

இரண்டு வருடமாகியும் பணத்தினை செலுத்தாத காரணத்தினால் சந்தேகநபர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து, பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

Latest Offers