உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிய இந்தியாவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் முகமாக இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாத சந்தேகநபர்களின் குரல்களின் மாதிரிகளை சேகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியாவின் என்ஐஏ என்ற தேசிய விசாரணை முகவரகம் ஆரம்பித்துள்ளது.

இதன் அடிப்படையில் கோயம்புத்தூரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் அஸாருதீனின் குரல் மாதிரி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரே தமிழகத்திலும் கேரனாவிலும் இளைஞர்களை தீவிரவாதத்துக்கு தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவாராவார்.

இந்தநிலையில் அவர் இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியதாரி சஹ்ரானுடன் தொடர்புகளை கொண்டிருந்தாரா என்பதும் இந்த குரல் மாதிரிகளில் இருந்து கண்டறியப்படவுள்ளதாக தேசிய விசாரணை முகவரகம் தெரிவித்துள்ளது.