கரைச்சி பிரதேச சபையின் அபிவிருத்தியில் ஒன்றாக பயணிப்போம்: வேழமாலிதன்

Report Print Arivakam in சமூகம்

கரைச்சி பிரதேச சபையின் அபிவிருத்தியில் ஒன்றாக பயணிப்போம் என கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் அ.வேழமாலிதன் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கரைச்சி பிரதேச சபையினை 2018 சித்திரை மாதம் பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து இருபது மாத கால சேவைகளை ஆய்வு செய்வதற்காக இங்க கூடி இருக்கின்றோம்.

இது வரை ஆற்றிய சேவைகளின் நிறைவினை வெளிப்படுத்துகின்ற அதே வேளை தாமதங்கள் செயற்திறன் இன்மைகள் கவனம் செலுத்தப்பட்டாத விடயங்கள் குறித்து சபையின் செயற்பாடுகளை செய்வதற்காகவும் இக் கலந்துரையாடல் அவசியமாக இருக்கின்றது.

2018ம் ஆண்டில் 71 மில்லியனாக இருந்த மூலதன வேலைத்திட்டத்தினை 97 மில்லியனாகவும் 2020ல் அதை 138 மில்லியனாக அதிகரித்து படிமுறை வளர்ச்சி உள்ள பாதீடாக எமது மக்களுக்கு அளித்திருக்கின்றோம்.

1417 மஆ வீதிகள் எமது பகுதியில் புனரமைக்கப்பட்ட வேண்டியுள்ளது. 197 சிறிய பாலங்கள், 2100 வீதி வெளிச்சங்கள், 61 மயானங்கள், 8 பொதுச்சந்தைகள் பூங்காக்கள் என்பன புனரமைக்கப்பட வேண்டியுள்ளது.

இத்தகைய பெரும் தேவைக்கு மத்தியில் கனரக வாகனங்கள் திரவ மற்றும் திடக்கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துவதற்காக பல கோடிக்கணக்கான ரூபாக்களை செலவு செய்துள்ளோம்.

இதை விட 400 மில்லியன் ரூபா செலவில் பிரதேச சபைக்குரிய வீதிகளை நிரந்த வீதிகளாகவும் 6 மில்லியன் ரூபா செலவில் வீதிகளை தற்காலிகமாக புனரமைத்தும் மக்களுக்கு வழங்கியுள்ளோம். 77 சிறிய பாலங்களை நிர்மாணித்துள்ளோம். 1217 வீதி வெளிச்சங்கள் கிரமாங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

பரந்தன் பேருந்து நிலையம், பசுமைப்பூங்கா என்பவற்றை நவீனமயப்படுத்தியுள்ளோம். பிரதேச சபையின் சேவைகளுக்குள் தீயணைப்பு சேவை உள்ளீர்க்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிலே பாதீட்டுக்கு மேலதிகமாக ஆதனவரி மூலமாக செயற்படுத்தப்படும் சிறப்பு வேலைத்திட்டங்கள், வீதிப்புனரமைப்பு பணிகள், பிரதேச சபைக்கு சொந்தமான 50 முஆ ஐ தர வீதிகள் 1200 மில்லியன் செலவிலான 2ம் தர நகர உருவாக்க பணி என்பனவும் 2020, 21ம் ஆண்டுகளில் செயற்படுத்தி நிறைவு செய்யப்படவுள்ளது.

இப்பணிகளை மேற்கொள்ளும் போது அரசியல் காழ்புணர்வின் நிமித்தம் இரண்டு ஊடகவியாளர்கள், ஒரு அரசியல் குழு சார்ந்து பொய்மான விடயங்களை புனைவது, போலிச் செய்திகளை உருவாக்குவதும், மலசல கூடப்படங்களை போடுவதும் நடைபெறுகின்றது.

பாதீட்டை குறித்த அரசியல் குழு எதிர்த்திருக்கின்ற போதும் ஆதானவரியை குழுப்பங்களை விளைவிக்கின்ற போது நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றபோதும் பொது மக்களின் பிரதிநிதிகளாகிய உங்களோடு இணைந்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு எங்கள் பணி தொடரும் என்று கரைச்சி பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

2019ம் ஆண்டில் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் மீளாய்வு 2020ம் ஆண்டில் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் தொடர்பான விளக்கம் மற்றும் ஆதனவரி தொடர்பான தெளிவூட்டல்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் குறித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் செயற்பட்டு வருகின்ற சனசமூக நிலையங்கள், கிராம அபிவிருத்திச்சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், சேவைச்சந்தை வர்த்தகசங்கள், கரைச்சிப்பிரதேச சபை தவிசாளர் மற்றும் நான்கு உப குழுக்களின் தலைவர்கள், பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers