வாகனத்தின் மேலதிக டயரை திருடுவதற்காக பல உயிர்களை கொன்ற நபர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

வெல்லவாய - திம்புலாமுர பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் மேலதிக டயரை திருடுவதற்காக வீட்டின் பாதுகாப்பிற்கு இருந்த நாய்கள் இரண்டு விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன.

நாய்கள் இரண்டிற்காக உணவில் வைக்கப்பட்ட விஷம் காரணமாக பூனைகள் மற்றும் 5 கோழிகள் உயிரிழந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், வாகனத்தின் மேலதிக டயரை திருடுவதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டிற்கு வந்துள்ளனர்.

எப்படியிருப்பினும், வீட்டின் பாதுகாப்பிற்கு இருந்த நாய்கள் இரண்டு குரைத்தமையினால் அவற்றுக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, அந்த வீட்டில் உணவு பெற தினமும் வரும் 3 பூனைகளும் 2 கோழிகளும் இந்த உணவை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers