தங்க விற்பனையில் மோசடிக்காரர்கள்! நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Sujitha Sri in சமூகம்

அநுராதபுரத்தில் குழுவொன்று தங்க முலாம் பூசப்பட்ட உலோகத்துண்டுகளை தங்கம் என கூறி குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் குறித்த குழுவை சேர்ந்த ஏழு சந்தேகநபர்கள் அநுராதபுரம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 27 - 55 வயதுகளை கொண்ட அநுராதபுரம் , மிஹிந்தலை, பானியங்கடவல ஆகிய பகுதிகளை சேர்ந்த சந்தேகநபர்களே கைதாகியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்களிடமிருந்து 270 கிராம் நிறையுடைய தங்க முலாம் பூசப்பட்ட உலோகத்துண்டுகளும், தெலைபேசி, கார் மற்றும் மோட்டார்சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், குறைந்த விலையில் தங்க விற்பனை என்றவுடன் ஏமாற்றமடையாமல் இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers