கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் நேருக்குநேர் மோதிய முச்சக்கரவண்டி: இருவர் பலி

Report Print Sujitha Sri in சமூகம்

கொழும்பு - கண்டி வீதியின் கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றும், எதிரே வந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 26 வயதுடைய பெண்ணும், 21 வயதுடைய ஆணொருவருமே உயிரிழந்துள்ளனர். இதேவேளை முச்சக்கரவண்டியின் சாரதியே காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த சாரதி கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers