இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்குச் சொந்தமான நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வர் இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த மீனவர்களின் இழுவை படகும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள நான்கு மீனவர்களும் யாழ்ப்பாணம் கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.