பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, மூதூர் பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் இன்று சந்தேகநபரை ஆஜர்படுத்தியபோதே இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிளிவெட்டி, மூதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இளைஞர் 16 வயதுடைய சிறுமியை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளதோடு, சிறுமியை தனி இடங்களுக்கும் அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேகநபரின் வீட்டுக்கு அருகாமையில் சிறுமியின் வீடு அமைந்துள்ளதாகவும், சிறுமியை திருமணம் முடிப்பதாக கூறியே இளைஞன் காதலித்து வந்துள்ளதாகவும், இரண்டு மாத காலமாக சிறுமியோடு தொடர்பில்லாது தலைமறைவாக இருந்த நிலையிலே சிறுமியின் பெற்றோர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வேண்டி மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers

loading...