யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினரால் கடை உரிமையாளர்கள் கைது

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மீன்பிடி வலைகள் விற்பனை செய்யும் இரு கடைகளில் சட்டவிரோத தங்கூசி மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த வலைகள் மீட்கப்பட்டுள்ளன.

ஒரு கடையிலிருந்து 30 கிலோகிராம் தங்கூசி வலையும், மற்றைய கடையிலிருந்து 329 கிலோகிராமும் என குறித்த வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத வலைகளின் பெறுமதி 12 இலட்சம் ரூபா என நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த இரண்டு கடைகளின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டு நீரியல்வள துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.