போக்குவரத்துக்கு இடையூறற்ற முறையிலே காற்றாலைகள் எடுத்து செல்லப்படுகின்றன: வீதி அபிவிருத்தி அதிகார சபை

Report Print Theesan in சமூகம்

மன்னார் பேசாலைப் பகுதியில் கரையோரத்தில் பொருத்தப்படவுள்ள காற்றாலைகளினால் சூழலுக்கு எவ்விதமான பாதகங்களும் ஏற்படாது என அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து வவுனியா ஊடாக மன்னாருக்கு எடுத்து செல்லப்படும் காற்றாலைகள் குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் எமது செய்தியாளர் இன்று தொடர்புகொண்டு கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையுடன் இணைந்து காற்றாலையால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி காற்றாலைகள் வவுனியா - மன்னார் வீதியூடாக எடுத்து செல்லப்படுகின்றது.

இதற்கான அனுமதிகள் உட்பட பொலிஸாரின் பாதுகாப்புக்கள் என்பன பெற்றுக்கொள்ளப்பட்டே பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறுகள் இன்றி இவற்றை இரவில் எடுத்து செல்லப்படுகின்றன.

பேசாலைப் பகுதியில் கரையோரத்தில் பொருத்தப்படும் குறித்த காற்றாலைகளினூடாக பெற்றுக்கொள்ளப்படும் மின்சாரம் இலங்கை மின்சார சபையினருக்கு வழங்கப்படும். பல வெளிநாடுகளில் இவ்வாறு காற்றாலைகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் பல நன்மைகளும் கிடைத்து வருகின்றன.

எனினும், பேசாலைப் பகுதியில் பொருத்தப்படும் காற்றாலைகளினால் சூழலுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது என்று ஆய்வுகளின் ஊடாக தெரியவந்துள்ளதென்று மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers