முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

குறிப்பாக தற்போது நாட்டில் புதிய அரச தலைவர் பொறுப்பேற்ற பின்னர், முல்லைத்தீவு - உண்ணாப்பிலவு வைத்தியசாலையில் வைத்தியர் வெற்றிடம் நிலவுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்கள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையான மாஞ்சோலை வைத்தியசாலையில், 60 வைத்தியர்கள் பணியாற்றவேண்டிய நிலையில், வெறுமனே 28 வைத்தியர்களே பணியாற்றுவதாக தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறாக பாரிய வைத்தியர் வெற்றிடம் நிலவுவதன் மூலமே அதிகளவான மரணச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பில் உரியவர்களுடன் பேசி மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers

loading...