வடமாகாண தொண்டர் ஆசிரியர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Sumi in சமூகம்

வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று வடக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாத 300இற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களே குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட நியமனத்தின் போது தாங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தமக்கு நியமனத்தை பெற்றுத் தருமாறும் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பிரதேசங்களிலும் இருந்து வருகைதந்த தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Latest Offers