சிவனொளிபாதமலையை அண்மித்த வனப்பகுதியில் கரும்புலிகளின் நடமாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

சிவனொளிபாதமலைக்கு அண்மித்த பகுதியான ரிகாடன் வனப்பகுதியில் கரும்புலிகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.

ஆகையால் வனத்துறையினர் ரிகாடன் வனப்பகுதியில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தி கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

அவ்வாறு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கமராக்களில் கரும்புலிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு கண்டறியப்பட்ட கரும்புலியானது 6 அடி நீளமும், 3 அடி உயரமும் கொண்டதாக காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.