மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில்

Report Print Sumi in சமூகம்

மிருசுவில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி இராணுவத்தினரால் புலிகள் என சந்தேகிக்கப்பட்டு இவர்களது உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமது உயிர்களை மீண்டும் பெற்றுத் தர முடியாது, ஆனால் தற்போது இறந்தவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு அரச வேலை வாய்ப்பினையும், நஷ்ட ஈட்டினையும் பெற்று தருமாறு கோரி முறைபாட்டினை பதிவு செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியினை ஜனாதிபதி விடுதலை செய்தது பற்றி தமக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது எனவும், தமக்கு உரிய நஷ்ட ஈட்டை பெற்றுத் தருமாறும் இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers